”மணிப்பூர் போல தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டனர்” சபாநாயகர் குற்றச்சாட்டு!

”மணிப்பூர் போல தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டனர்” சபாநாயகர் குற்றச்சாட்டு!

மணிப்பூரில் நடக்கின்ற கலவரத்தை போன்று சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். 


சென்னை ஆவடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளையை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயாகர், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர், எனவே, அவர் தானாக முன்வந்து நான் பதவி விலகி விடுகிறேன் என்று கூறினால் மட்டுமே முதலமைச்சர் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க முடியும். ஆகையால் அவரது பதவியை யாராலும் பறிக்க முடியாது என்று கூறினார். 

இதையும் படிக்க : இருசக்கர ஊர்திகளுக்கான சாலைவரியை உயர்த்த முடிவா? மாநில அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும்!

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரமானவர், எந்த நிலையிலும் எதையும் சந்திக்க தயாரானவர் என்று குறிப்பிட்டவர், மணிப்பூரில் நடக்கின்ற கலவரத்தை போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர். 

அதாவது வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக கூறி ஒரு பொய்யான வீடியோவை பரப்பி பதற்றத்தை உண்டாக்க நினைத்தார்கள். ஆனால், முதலமைச்சர் அந்த சூழ்நிலையை தைரியமாக எதிர்க்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வந்தார். யார் நினைத்தாலும் இங்கு கலவரத்தை உண்டாக்க முடியாது. இது மணிப்பூர் அல்ல தமிழ்நாடு என்று நிரூபித்து காட்டி இருந்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதால் திமுகவின் ஓட்டு வங்கி குறையாது என்றும், செந்தில் பாலாஜி கைதால் கொங்கு மண்டலமே கிளந்தெழுந்திருப்பதாகவும் கூறினார்.