”தீட்சிதர்களை வைத்து பிரச்னைகளை உருவாக்குவதே திமுக தான்” அண்ணாமலை குற்றச்சாட்டு!

”தீட்சிதர்களை வைத்து பிரச்னைகளை உருவாக்குவதே திமுக தான்” அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களை வைத்து புதிய புதிய பிரச்னைகளை உருவாக்குவதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளது என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா். 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 6 நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினாா். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த அவர், எத்தனையோ கோயில்களில் எவ்வளோ பிரச்னைகள் உள்ளது. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களை வைத்து புதிய, புதிய பிரச்சனைகளை உருவாக்குவதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளதாக விமா்சித்தாா். 

இதையும் படிக்க : "எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான்" தமிழிசை விளக்கம்!

இதைத்தொடா்ந்து பேசிய அண்ணாமலை, சிதம்பரம் கோயிலில் இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது என தேசிய குழந்தை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனா். ஆனால் திமுக அரசு அதனை மறுத்து, முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டினாா். 

மேலும், தமிழ்நாடு பாஜகவின் “என் மண் என் மக்கள்” நடை பயணத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக தெரிவித்துள்ளார். எனவே நடைபயணத்தின் முழு திட்ட விவரமும் விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணாமலை தொிவித்தாா்.