திமுக ஜனநாயக இயக்கம் என்பதால் மசோதாவை திரும்பப் பெற்றது...! அமைச்சர் சேகர்பாபு...!! 

திமுக ஜனநாயக இயக்கம் என்பதால் மசோதாவை திரும்பப் பெற்றது...!  அமைச்சர் சேகர்பாபு...!! 

திமுக ஜனநாயக பூர்வமான இயக்கம் என்பதால்  12 மணி நேர வேலை சட்ட மசோதாவை  திரும்பப் பெற்றிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொழிலாளர் தின விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்படத்தின் இசைக் கலைஞர்கள் சங்கம், திரைப்பட, டிவி வெளிப்புற லைட் மேன் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் பூச்சி முருகன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி சிவகுமார் ராதாரவி இயக்குனர் பேரரசு பாடல் ஆசிரியர் பா. வஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, "ஒரு அரசு என்பது அனைத்து அமைச்சர்களுடன் கூட்டுப் பொறுப்பை கொண்டு இருக்கிறது. அமைச்சர் சிவி கணேசன் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று 14 முறை நடிகர் இளவரசு பேசியிருந்தார். ஆகவே சொல்கிறேன், அமைச்சர் சிவி கணேசன் போனாலும் என் மூலமாக உங்கள் கோரிக்கைகள் முதலமைச்சரை சென்றடையும்" எனத் தெரிவித்தார்.

மேலும், "திரைப்படத் தொழிலாளர்களின் தேவைகளை எழுத்துப் பூர்வமாக பெப்சி தலைவரிடம் கொடுங்கள். அதில் எவை எல்லாம் செய்ய முடியுமோ ஒரு திட்டமிடுதலோடு அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சியை பெப்சி தொழிலாளியாக நானும் இனைத்துக்கொண்டு, அந்த முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்" என்று தெரிவித்தார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு என்ன நிகழ்வு என்று எனக்கு தெரியாது ஆர்கே செல்வமணி அழைக்கிறார் என்று வந்தேன். வந்த பிறகு இது சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது என குறிப்பிட்ட அவர் திமுக ஜனநாயகபூர்வமான இயக்கம் என்பதால்  12 மணி நேர வேலை மசோதா சட்டம் குறித்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக தொழிற்சங்கங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக அதை திரும்ப பெற்றுள்ளதாக கூறினார்.