”திமுக மட்டும் தான் எங்கள் அரசியல் எதிரி...பாஜகவும், காங்கிரசும் எங்களுக்கு நண்பர்கள் தான்” - செல்லூர் ராஜூ அதிரடி!

”திமுக மட்டும் தான் எங்கள் அரசியல் எதிரி...பாஜகவும், காங்கிரசும் எங்களுக்கு நண்பர்கள் தான்” - செல்லூர் ராஜூ அதிரடி!

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள்தான்,எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது 69 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் பிறந்தநாள் விழா, மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். 

இதையும் படிக்க : ”தவளை தன் வாயால் கெடும்”...”பிடிஆர் ஆடியோவால்” சிக்கிக்கொண்டார்... செல்லூர் ராஜூ அதிரடி!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஓ.பி.எஸ். இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படி தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்" என்று அதிரடியாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவரிடம் , கூட்டணி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் தான், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.