ஈபிஎஸ் சொன்ன சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு...முதலமைச்சர் அளித்த பதில் என்ன? எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!

ஈபிஎஸ் சொன்ன சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு...முதலமைச்சர் அளித்த பதில் என்ன? எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும்  நிறைவேற்றவில்லை என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். 

ஈபிஎஸ் பேசியதை வெளியிடவில்லை :

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று வழக்கம்போல் பேரவை கூடியது. அதில் வினாக்கள் விடைகள் நேரமும் நிகழ்ந்தது. இதையடுத்து, சட்டப்பேரவை முடிந்த பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, திமுக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரண்டு மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேசினார். ஆனால், எந்த தொலைக்காட்சியிலும் எடப்பாடி பழனிசாமி பேசியதை ஒளிபரப்பவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க :ஆளுநர் விவகாரம்...கருத்து சொல்ல விரும்பவில்லை - தமிழிசை பேச்சு!

கடன் வாங்கியது உண்மை:

தொடர்ந்து பேசிய அவர், இன்றைய சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், கடந்த ஆட்சியை காட்டிலும் இந்த ஆட்சியில் குறைவான கடன் சேர்ப்பதாக தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  வரிகள் உயர்த்தப்பட்டதால் அரசுக்கு வருமானம் அதிகமானதாகவும், இருந்தாலும் கடன் வாங்கியது உண்மைதானே என்றும் கூறினார். 

அமைதி பூங்கா :

மேலும் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சி தலைவர் முன்வைத்த நிலையில், முதலமைச்சர் பொத்தாம் பொதுவாக தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்கா என்று கூறியதாக குற்றம் சாட்டினார்.