தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக உழைக்கும் திமுக அரசு - முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக உழைக்கும் திமுக அரசு - முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைத்தார். 

இதன் ஒருபகுதியாக, பல்லவன் சாலையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உடற்பயிற்சி கூடம் மற்றும் திரு.வி.க. நகரில் சிறுவர் பூங்கா கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். இதேபோல், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பல்நோக்கு மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இதையும் படிக்க : அதிகரிக்கும் கொரோனா...கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்...!

இதனைத் தொடர்ந்து, பல்லவன் சாலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்ட முதலமைச்சர், புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார். இதேபோல், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட உள்ள பல்நோக்கு மையம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜவஹர் நகர் 2-வது பிரதான சாலையில் உள்ள கூடைப்பந்து மைதானத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

இதன்பின்னர், பெரியார் நகர் விளையாட்டு மைதானத்தில், 'அனிதா அச்சிவர்ஸ் அகாடமி'யில் பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.