மழைக்கால கூட்டத் தொடா்...திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

மழைக்கால கூட்டத் தொடா்...திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள்  ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.  


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினா்கள்  கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு...!

இந்த ஆலோசனை கூட்டத்தில், மழைக்கால கூட்டத் தொடா் குறித்து  எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.