இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு...!

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு...!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கபில்சிபல் காணொலி வாயிலாக வாதங்களை முன்வைத்தார். குற்றம் புரிந்ததன் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அப்படி அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : மானாவாரி நிலத்தில் விளைச்சல் அமோகம்...விவசாயிகள் மகிழ்ச்சி!

மேலும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய கபில்சிபல், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்த பின்னர், ஆட் கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்றும் வினவினார். 

பின்னர், என்ஆர் இளங்கோ சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள்  மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளதாகவும், இது முறையல்ல என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாததை அடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.