ஆன்லைன் வாயிலாக டி.ஜி.பி. ஆலோசனை...அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...!

ஆன்லைன் வாயிலாக டி.ஜி.பி. ஆலோசனை...அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்...!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான இணையதள ஆலோசனை கூட்டம், டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. 

தமிழக காவல்துறை நடவடிக்கை:

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை தடுக்க, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் ஆந்திர, கேரள எல்லைப் பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை, வாகன தணிக்கைகள் நடத்தி பறிமுதல் செய்வதுடன், குற்றவாளிகளை கைது செய்து, சிறையிலும் அடைத்து வருகின்றனர். இதுதவிர கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் குடும்ப சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகிறது. 

முதலமைச்சர் ஆலோசனை:

போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க, கடந்த 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடனும், மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்தினார். 

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/Annamalai-accused-that-the-only-people-who-grew-up-in-Tamil-Nadu-are-Gopalapuram-families-because-of-free-giving

ஆன்லைன் ஆலோசனை கூட்டம்:

இந்நிலையில், போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் போதைப் பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், இன்னும் என்னென்ன மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.