கவுன்சிலர்கள் வார்டுக்கு சென்று குறைகளை தீர்த்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் - சக்கரபாணி!

கவுன்சிலர்கள் வார்டுக்கு சென்று குறைகளை தீர்த்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் - சக்கரபாணி!

கவுன்சிலர்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு உரையாற்றினார். 

இதையும் படிக்க : கருணாநிதியை போல் ஸ்டாலினையும் நாடாள அழைப்பார்கள் - ஆசையை உருக்கத்துடன் பகிர்ந்த துரைமுருகன் !

அப்போது பேசிய அவர், குடிநீர் தேவைக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும், சாக்கடையை தூய்மைப்படுத்த ரூபாய் 4 கோடி ரோடு அமைக்க ருபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு, சாக்கடையை சீரமைக்க ரூபாய் 18 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு சென்று மக்களின் குறைகளை தீர்த்து அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.