மசோதாக்கள் பற்றி ஆளுநர் பேசிய சர்ச்சை கருத்துக்கள் ..! மாளிகை தரும் விளக்கங்கள் ...!

மசோதாக்கள் பற்றி ஆளுநர் பேசிய சர்ச்சை கருத்துக்கள் ..!    மாளிகை தரும் விளக்கங்கள் ...!

 சமீபத்தில் ஒரு நிகழ்வில் சட்டப்பேரவை  மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்துக்களை கண்டித்து பல்வேறு ஏதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவரின் இந்த  செயலைக்கண்டித்து திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் மளிகை அதுகுறித்த விளக்கத்தை அறிவித்துள்ளது.  அதன்படி,சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க அரசியலமைப்பு சட்டத்தின் படி  ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளது. அதாவது; 
1. மசோதா சரியாக இருப்பின் அதனை  நிறைவேற்றலாம். 2, மசோதா சரியாக இல்லாத பட்சத்தில் அதனை நிறுத்திவைக்கலாம். 3. மத்திய அரசு சட்டத்துக்கு இணையான ஒரு மசோதா இயற்றப்பட்டிருப்பின் அந்த மசோதா மீதான முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். 
குடியரசு தலைவர் அந்த மசோதா குறித்த முடிவுகளை இரண்டு வகையாக கையாளலாம். அந்த மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் அளிக்கலாம், சரியாக இல்லையெனில் அதை நிறுத்திவைக்கலாம். சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத  மசோதாக்களை நிறைவேற்றியதாக ஆளுநருக்கு தோன்றினால் அதை திருப்பி அனுப்பலாம் எனக் குறிப்பிட்டிருந்தது. அந்த மசோதாவானது மீண்டும் மறுபரிசீலனை  செய்து விவாதிக்கப்பட்டிருந்தால் அந்த மசோதாவுக்கு ஆளுநர்  ஒப்புதல் தந்தாகவேண்டும் என்பதே அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது என அதில் குறிப்பிட்டிருந்தது. 

மேலும் படிக்க :  https://www.malaimurasu.com/Demonstration-against-the-governor-on-12th-DMK-alliance-parties