தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, மீண்டும் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் தினசரி கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 949 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்து 51 ஆக இருந்த நிலையில் நேற்று ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்று முன்தினம் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் குறைந்து, 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து 172 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,980 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 938 ஆக குறைந்துள்ளது.