வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தொடரும் தடை...

வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழிபாட்டுத்தலத்தில் பக்தர்கள் தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தொடரும் தடை...

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லவும் அனுமதி வழங்கி இருந்தது.

 இந்நிலையில் வெள்ளி சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை, வருவாய் ,பேரிடர் நிர்வாக துறை தகவல் தெரிவித்துள்ளது.

 கடற்கரை ,தியேட்டர் திறப்பால் கொரோனா தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களுக்காக காத்திருப்பதாகவும், கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்தால் கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.