கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுங்கள் - துரைமுருகன் வேண்டுகோள்!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுங்கள் - துரைமுருகன் வேண்டுகோள்!

கர்நாடக தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில்   வரும் 10 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : திரளான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்...!

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.