துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சரின் ட்விட்டர் பதிவில், தடைபட்ட கல்வியை தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும், ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன் பெறட்டும் எனவும்  கூறியுள்ளார். 

அதேபோல், இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ள முதலமைச்சர்,  பள்ளிகளை நோக்கி வரும் பிள்ளைகளை, கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை என்றும், பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும் எனவும், இடையில் தடைபட்ட வாய்ப்பை மாணவர்கள் தற்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாகவும் முதலமைச்சர் அவருடைய சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.