கிராமப்புற பகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படுமா? அமைச்சரின் பதில் என்ன?

கிராமப்புற பகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படுமா? அமைச்சரின் பதில் என்ன?

அரசு கல்லூரி இல்லாத பகுதிகளில் விரைவில் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கிராமப்புற பகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படுமா என கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : புதிய மாவட்டம் ஆகிறதா பழனி? பதிலளித்த அமைச்சர்...!

இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கல்லூரிகள் இல்லாத 26 இடங்களில், கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அத்துடன், சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி குறிப்பிட்ட பகுதியையும் சேர்த்து, பரிசீலித்து விரைவில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.