5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு...

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது.

5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு...

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும், செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றது.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது. வரும் 16ம் தேதிக்குள் இதுதொடர்பான விபரங்களை அரசுக்கு தர வேண்டும் எனவும் கூட்டுறவு சங்க வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடன் பெற்றுள்ள பயனாளிகளின் கே.ஒய்.சி ஆவணங்கள், குடும்ப அட்டைகள் தொடர்பான விபரங்களை கூட்டுறவு சங்க வங்கிகள் தயார் நிலையில் வைத்திருக்கவும், 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள கடன்கள் தொடர்பாக விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கியவர்கள் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.