"எதுக்குங்க மைக் ஆப் பண்றீங்க?" மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்!!

ஆட்களை பிடித்து வருவது எங்கள் வேளை இல்லை என, திமுக மாமன்ற உறுப்பினர் - திமுக மேயர் இடையே கடுமையான வாக்குவாதம்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் அவசர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் 40 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் நீலகண்டன் பேசுகையில், "பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை குறைந்த கட்டணத்திற்கு ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் மாநகராட்சிக்கு வருவாய் பெருக்க வேண்டும் என அதிக தொகைக்கு ஏலம் விட்டீர்கள். தற்போது 3.5 லட்சத்திற்கு ஏலம் விட்ட கடைகளை தற்போது குறைத்து 1.5 ஏன் மறு ஏலம் விட்டீர்கள். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படாதா" என கேள்வி எழுப்பினார்.  

அதற்கு மேயர் அதிக ஏலம் கொடுக்கும் ஆட்களை சொல்லுங்கள் என கூறினார். அதற்கு 9வது வார்டு உறுப்பினர் ஆனந்த் ஆட்களை பிடித்து வருவது எங்கள் வேளை இல்லை என கூறினார். இதனால் திமுக உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. 

இதனால் கூட்டத்தில் இருந்து மேயர் பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கேள்வி கேட்க, மைக் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் மேயர் செய்யும் தவறை கேட்க கூடாதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.