மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை...முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்!

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை...முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்!

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விசை படகுகளின் உரிமையாளருக்கு  4 கோடியே 67 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க : 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தவர், இது தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என கூறினார்.