பெருகிவரும் இணையவழி மோசடிகள்... நவீன வழிமுறைகளை கண்டறிந்து தடுக்க வேண்டும்..  டி.எஸ்.பி.க்களின் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் பேச்சு

குற்ற செயல்களை தடுப்பதில் மட்டுமல்ல, குற்றங்களே இல்லாத மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்பதை உறுதியேற்று செயல்பட வேண்டும் என, போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

பெருகிவரும் இணையவழி மோசடிகள்... நவீன வழிமுறைகளை கண்டறிந்து தடுக்க வேண்டும்..  டி.எஸ்.பி.க்களின் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் பேச்சு
தமிழக காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா, செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.எஸ்.பி. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். 
 
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இணைய வழி மூலம் பல்வேறு மோசடிகள் பெருகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, நவீன வழிமுறைகளை கண்டறிந்து சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ள அவர், தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்பட வேண்டும் என்றும், காவல்துறையின் விருப்பங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றும் எனவும் கூறியுள்ளார்.
 
முன்னதாக  காவல்துறையின் கண்கவர் சாகசங்கள் நடைபெற்றன. இதை முதலமைச்சர் ஸ்டாலின்   மற்றும்  காவல்  உயர் அதிகாரிகள்  கண்டு ரசித்தனர்.