முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி..!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி..!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் த்ற்போது அவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எனக்கு இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இதனால் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.