ஆணுக்கு நிகராக துணிச்சலாக செயல்படுகிறார் சென்னை மேயர் - அமைச்சர் பாராட்டு..!

ஆணுக்கு நிகராக துணிச்சலாக செயல்படுகிறார் சென்னை மேயர் - அமைச்சர் பாராட்டு..!

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 18 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருந்ததையடுத்து இன்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அக்கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றது சர்ச்சையானதை குறித்துப் பேசினார்.

பேசு பொருளான மேயர்

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சகர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அவருடன் சேர்ந்து காசிமேடு பகுதியில் மேயர் பிரியாவும் உடன் சென்றார். அப்போது மேயர் பிரியா பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றார். இந்நிலையில் மேயர் இவ்வாறு வாகனத்தில் தொங்கியபடி சென்றது பெரும் பேசு பொருளாகி வருகிறது.  

ஆணுக்கு நிகரான பெண்

எனவே, இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, முதல்வர் அடுத்த இடத்தில்  ஆய்வுக்கு செல்வதால், அந்த இடத்திற்கு விரைவாக செல்வதற்காக மேயர் இயல்பாக பயணித்தார். அதுவும் பாதுகாப்பு வாகனம். ஆணுக்கு நிகராக துணிச்சலாக ஒரு பெண் பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும்.  இதை அதிகார துஷ்பிரோயமாக பார்க்க கூடாது என்று பதிலளித்தார்.

மேலும் படிக்க: கோவில் அனைவருக்கும் சமமானது - அமைச்சர் சேகர்பாபு பேச்சு

கொடி கட்டி பறக்கும் திராவிட மாடல்

அதனை தொடர்ந்து, திராவிட மாடல் என்பதற்கு பதில் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற தமிழிசையின் விமர்சனம் பற்றி கேட்ட போது, ஆளுநர் ஆளுநருகான வேலைகளை பார்க்க வேண்டும். பக்கத்து மாநில ஆளுநர் அடுத்த மாநிலத்தை விமர்சிப்பது தேவையற்றது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் தான் ஒன்றிய அளவில் கொடி கட்டி பறக்கின்றது என்றார் அமைச்சர் சேகர்பாபு.

- அறிவுமதி அன்பரசன்