8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க : "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்க தக்கது" அண்ணாமலை!

இந்நிலையில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.