ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தம்!!

ஹாலோ பிளாக் கற்கள் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தம்!!

திருப்பூர் மாவட்டத்தில் செய்லபட்டு வரும் 500 ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தியாளர்கள் திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும், கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கல்குவாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து திருப்பூர் மாவட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கற்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனால், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் கட்டுமான பணிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். நேரடியாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் பேர் மற்றும் மறைமுகமாக 1 லட்சம் பேர் வேலை இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க || மகாராஷ்டிராவில் கோர விபத்து... அதிகாலையில் நிகழ்ந்த சோகம்!