” கீழமை நீதிபதிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தலாமே ” - சென்னை உயர்நீதிமன்றம்.

” கீழமை நீதிபதிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தலாமே ” -   சென்னை உயர்நீதிமன்றம்.

நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்,  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் , தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது. 

இதனை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் நால்வர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் கே ராஜசேகர் அமர்வு, ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக நீதிபதிகள் தேர்வு நடைபெறாத நிலையில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கைகளுடன் மற்றவர்களும் வழக்கு தொடரக் கூடும் எனவும், இதனால் தேர்வு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையிலேயே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதால அதனை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நிலுவை வழக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில்,  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க   |  சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்....!