ஒன்றரை மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது...

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது...
தமிழ்நாட்டில் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லம் உட்பட சென்னையின் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பேருந்துகளில், 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
 
இதனால், கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பேருந்துகளில் மக்கள் பயணம் மேற்கொண்டனர். இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.