மக்களே உஷார்.. 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் கணித்துள்ளது.

மக்களே உஷார்.. 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.. உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

வடக்கு - வடகிழக்கு திசையில், வடஆந்திரா -ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் வருகிற 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்  மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு  வங்க கடல், வடமேற்கு வங்க கடல், ஆந்திர கடற்கரை பகுதிகள்,  கேரளா மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் வருகிற 12ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.