சாலைகளில் நிகழ்ச்சி நடத்தினால்...தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம் - மா.சுப்பிரமணியன்!

சாலைகளில் நிகழ்ச்சி நடத்தினால்...தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம் - மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் சென்னை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

இதையும் படிக்க : ஐபிஎல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ நிலையங்கள்...பிரமாண்ட திரையில் ஒளிபரப்பா?

பின்னர் மேடையில் பேசிய மா. சுப்பிரமணியன், கடந்த முறை பொதுக்கூட்டம் நடக்கும்போது அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் சிறிதும் முகம் சுளிக்காமல் முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதால் அமைதியாக சென்று விட்டனர். அன்று முதல் அரச மரத்தடியில் பொதுக்கூட்டம் நடத்துவதை திமுக விரும்பாது என்றும், திமுக நடத்தும் பொதுக்கூட்டங்களால் எந்த மக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்றும்,  சாலை ஓரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் சாலைகளில் பேனர் வைக்க கூடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதால், தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.