இனி தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும்.. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்.ராஜா வாழ்த்து.! 

இனி தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும்.. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்.ராஜா வாழ்த்து.! 

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை நியமித்து மத்திய பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களுக்கு  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தலைமையில் தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும்" எனக் கூறியுள்ளார்.