அரசியல் சாசன சட்டத்தை ஏற்க மறுக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் - பாலகிருஷ்ணன் பேச்சு

தற்போதுள்ள இந்திய அரசியல் சாசனத்தை படிப்படியாக தகர்த்து மனுநீதி நூலினை இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்றும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன சட்டத்தை ஏற்க மறுக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் - பாலகிருஷ்ணன் பேச்சு

அண்ணலின் சிலைக்கு மரியாதை 

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று சென்னை சைதாப்பேட்டை மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் மாணவர் விடுதி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

கோஷம் எழுப்பிய கம்யூனிஸ்ட்

வகுப்புவாத சக்திகளையும், சாதிய கொடுமைகளையும் முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள் கட்சியின் கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அம்பேத்கருக்கு எதிரான பாஜக

இன்றைய சூழலில் அம்பேத்கரின் கருத்துக்கள் மகத்தான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன சட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிரான கொள்கையுடையது பாஜக கட்சி.

மேலும் படிக்க: விதிகளை மீறிய பிரதமர் மோடி..! சீறிய மம்தா..!

முதன் முதலாக அரசியல் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கிய போது அதற்கு  எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போதுள்ள இந்திய அரசியல் சாசனத்தை படிப்படியாக தகர்த்து மனுநீதி நூலினை இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்றும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருவகின்றனர் என்று பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

- லெனின் பிரபா