முழு கொள்ளளவை எட்டிய ஆழியார் அணை- 4 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை இரண்டாவது முறையாக நிரம்பியதால் அணையில் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் வழியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

முழு கொள்ளளவை எட்டிய ஆழியார் அணை- 4 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அப்பர் ஆழியார் அணை மின் உற்பத்திநிலையத்தின் வ்ழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணையின் முழு கொள்ளவு 120 அடியை எட்டியது.

இதனைதொடர்ந்து அணையின் பாதுகாப்புகருதி 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 1300 கனஅடி உபரிதண்ணீரும், இதேபோல் பொள்ளாச்சி மற்றும் வேட்டைக்காரன் புதூர் கால்வாய் வழியாக 330 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வால்பாறை பகுதியில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு 1300 கனஅடிநீர் வந்து கொண்டுள்ளது.

இந்த உபரி நீரை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய குளங்களுக்கு விட்டு நிரப்பினால் கோடைகாலத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயநிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்ஊற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அமையுமென பொதுமக்களும், விவசாயபெருமக்களும் தெரிவிக்கின்றனர்.