கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிவை ஏலம் விட முயற்சி...

கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிவை ஏலம் விட முயற்சி...

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவத்தூர் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவி ஏலம் விடப்பட்டது. இப்பகுதிக்கு 3 வார்டு உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து, ஊர் மாரியம்மன் கோவிலில் முக்கிய நபர்கள் முன்னிலையில் உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடைபெற்றது.

இதனை, அங்குள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும், ஜனநாயக முறைப்படியே தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஊர் பெரியவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஏலம் கைவிடப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படியே நடக்க வேண்டும் என அரசும், தேர்தல் ஆணையமும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.