கடலூரில் பஸ் கண்ணாடி உடைப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக நிர்வாகிகள் 55 பேர் கைது...!

கடலூரில் பஸ் கண்ணாடி உடைப்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக நிர்வாகிகள் 55 பேர் கைது...!

என்எல்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. அறிவித்தது. இந்நிலையில் கடைகள் வழக்கம் போல் செயல்படாலம் என்றும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க : அறப்போர் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி...!

இந்நிலையில் பண்ருட்டி நோக்கி செட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பேருந்து கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சுமார் ஏழாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கபட்டு வருகிறது.