"தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்" அன்புமணி அறிக்கை!!

"தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்" அன்புமணி அறிக்கை!!

மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 423 தீர்ப்புகளில், 128 தீர்ப்புகளுடன் தமிழ் மிகவும் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் 128 தீர்ப்புகள் மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கும் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார். மாநில மொழிகளில் தீர்ப்புகள் இல்லாவிட்டால், மாநில மொழிகளில் எவ்வாறு வாதிட முடியும்? என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கேள்வியின் மூலம், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கும்  எண்ணம் அவருக்கு இருப்பது புரிந்துகொள்ள முடிவதாக கூறியுள்ளார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றி 17 ஆண்டுகள் நிறைவடைந்தும் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வாதிடுவதற்கு அனுமதிக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை  மாநில மொழிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளே தொடர்ந்து  கூறிவருவதுடன், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம்  மூலமாகவே சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுதியுள்ளார்.

இதையும் படிக்க || சூறாவளி போல போகிற... குறுக்க இந்த கௌசிக் வந்தா??