தேர்தலில் 43 சதவீத வாக்குகள் மட்டுமே அளித்த...சென்னை வாசிகளின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும்!!

தேர்தலில் 43 சதவீத வாக்குகள் மட்டுமே அளித்த...சென்னை வாசிகளின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43 சதவீதம் வாக்குகள் மட்டுமே அளித்த சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.  

சென்னை தி.நகரில், பாமக கட்சியின் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புத்தகமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு கண்டிப்பாக ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், இனி வரும் தேர்தலில் வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னம் கொடுத்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.