தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் 7 மணி நேரம் தாமதமாக  செல்லும் என தெற்கு  ரயில்வே  அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

 சித்தூரில் இருந்து ஹரியானா மாநிலம் காசியாபாத் நோக்கி 15 பெட்டிகளில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரயில் மதுரா அருகே தடம் புரண்டது.

இதன் காரணமாக நேற்று இரவு முதல் மதுரா-டெல்லி இடையே ரயில்வே சேவை முற்றிலும் தடைபட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயிலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

 இதன் காரணமாக தென் மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா, ஆந்திரா-வில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் 7 மணி நேரம் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ராஜ்தானி, டுரோண்டோ, கிராண்ட் டிரெங்,தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா மார்க்கமாக செல்லும் பெரும்பாலான ரயில்களும் இடையிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.