கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்...நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்...நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கள்ளர் ஆற்றில் இறங்கும் வைபவம் குறித்து, அதிமுக உறுப்பினர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது போதுமான போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறினார்.

இதையும் படிக்க : சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி பதில்!

அத்துடன், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, அகோபில நரசிங்க பெருமாள் திருக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, இரண்டு , மூன்று மாதங்களில் திருப்பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்தார்.