அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல்.. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிடியனிசம்..!

கடந்த ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை  சரியாக நடைமுறை படுத்தாமல் இருந்ததால் அது பயனுள்ள புதுமை பெண் திட்டமாக மாற்றப்பட்டது

அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல்.. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிடியனிசம்..!

அமைச்சர் பி.டி.ஆர் உரை
 
லயோலா வர்த்தக மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெறும்  "திராவிட மாடலில் மனித வள மேம்பாடு மற்றும் வர்த்தக முன்னேற்றம்" எனும் தலைப்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில திட்டக் குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், இடதுசாரி - வலதுசாரி நாடுகளுக்கு இடையிலான போட்டியாக உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அனைவரும் சமம் என்பதே திராவிட மாடல். சாதி, மதம், இனம், பால் வேறுபாடு இன்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிடியனிசம்.

முன்னணியில் தமிழ்நாடு

திராவிட மாடலினால் பல்வேறு ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதற்கான தரவுகள் உள்ளன. நாட்டின் 4 முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளது, சமூக பொருளாதார அடிப்படையில் முன்னணியில்  இருக்கிறது.

மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் திட்டம்

பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பல பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். ஒரு வருடத்தில் ஒரு பெண், இலவச பயண திட்டத்தால் அடையும் பயனை சமூக பொருளாதார அடிப்படையில் பார்த்தால், இது சாதனையாக இருக்கும். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்குவது எதிர்காலத்திற்கான முதலீடு.

மாற்றுத்திறனாளி, கைம்பெண், முதியோர் பென்ஷன் தொகை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. பொருளாதாரம் மந்த நிலையும், விலை ஏற்றமும் அவர்களுக்கு இல்லையா? பென்சன் தொகையை உயர்த்துவதற்கான கணக்கீடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

புதுமை பெண் திட்டம்

கடந்த ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தை  சரியாக நடைமுறை படுத்தாமல் இருந்ததால் அது பயனுள்ள புதுமை பெண் திட்டமாக மாற்றப்பட்டது. புதுமை பெண் திட்டத்தில் 5 லட்சத்திற்க்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

உயர் கல்வியில் அவர்களுக்கு தரப்படும் 1000 ரூபாய், இடைநிற்றலை குறைத்து பெண்கள் கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். தமிழ்நாடு அதிக உயர்கல்வி படிப்பவரின் எண்ணிக்கையில் 53% பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க: #GetOutRavi: இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டேக்...!

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டமும், இலவச பேருந்துப் பயணம் திட்டமும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது.