100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிய அக்னி தீர்த்த கடற்கரை.. நீராடிச் செல்ல வரும் பக்தர்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரை சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கிய அக்னி தீர்த்த கடற்கரை.. நீராடிச் செல்ல வரும் பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று நீராடி விட்டு ராமநாதசாமி கோயிலில் வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக 100 மீட்டர் தூரத்துக்கு அக்னி தீர்த்த கடற்கரை உள்வாங்கியே இருப்பதால், நீராட வரும் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர். கடல் உள்வாங்கியதால், அடியில் இருக்கும் ராட்சத பாறைகள் மற்றும் சாமி சிலைகள் அனைத்தும் வெளியில் தெரிந்த வண்ணம் உள்ளது.