ஈரோடு: முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை - முதலமைச்சர் உரை!

ஈரோடு: முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை - முதலமைச்சர் உரை!

அனைத்து துறைகளிலும் ஈரோட்டை முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

முதலமைச்சர் 2 நாள் பயணம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார். அப்போது, கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். 

அரசு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்:

சிலையை திறந்து வைத்த பின்னர் ஈரோடு நோக்கி வந்த மு.க.ஸ்டாலினுக்கு, பல்வேறு இடங்களில் பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, இன்று பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். 

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்:

விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின், அரசு துறை சார்பில் 261 கோடியே 57 லட்சம் மதிப்பிலான135 முடிவுற்ற புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, ஆயிரத்து 761 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Transfer-of-Gratuity-Case-to-3-Judge-Bench

மு.க.ஸ்டாலின் உரை:

நிகழ்ச்சியை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோடு, தாளவாடியில் 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்கும், 10 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் ஏற்றுமதி மையமும் அமைக்கப்படும் என உறுதியளித்தார்... 

தொடர்ந்து, வேளாண் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈரோடு பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுள்ளதாக தெரிவித்தார்.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: 

மேடையில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின்,  ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முதன்மையானதாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறினார்.