கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!!

கொரோனா பரவலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் சென்னையிலும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தநிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் சாதனை குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.