இன்று அதிமுக செயற்குழு கூட்டம்..!!

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்..!!

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. சென்னையில் இன்று நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் கர்நாடக தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல்கூட்டம் என்பதால் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதையடுத்து இந்த கூட்டத்தில் கா்நாடக தோ்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அதிமுகவில் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.