ஊழலை எதிர்த்து போராடக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்...! நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பேட்டி...!

ஊழலை எதிர்த்து போராடக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான்...!  நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பேட்டி...!


கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளியில் உள்ள பாரத கோவிலில் ரூ. 9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான தம்பிதுரை கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் .. 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் தொடர் பற்றிய கேள்விக்கு  பதிலளித்த அவர், "திமுக என்றால் அராஜகம், ஊழல், குடும்ப அரசியல். அதைத்தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதியதல்ல, இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் அதிமுகவின் கொள்கை. அதற்காகத்தான் எம்ஜிஆர் அவர்கள் குடும்ப அரசியல் ஊழல் வேண்டாம் என அதிமுகவை  உருவாக்கினார். அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. ஜனநாயக முறையில் செயல்படக்கூடிய இயக்கம்" என்று கூறினார்.

 இதையும் படிக்க:...ஊழல் பட்டியலை வெளியிட்டவர்.... ஊழல் கூட்டணிகளை முடித்துக்கொள்வாரா... ?

மேலும் , "திமுக எப்படி எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் அராஜகத்துடன் செயல்பட்டார்களோ அப்படிதான் தற்போது ஆட்சிக்கு வந்தும் செயல்படுகின்றனர். திமுக ஊழல் கட்சி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி திமுக. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணி  நல்ல கூட்டணி அமைத்து,   ஊழல் ஒழிக்க பட வேண்டும்,  குடும்ப அரசியல் இருக்கக் கூடாது ,  என்பதை வலியுறுத்துவோம்' எனவும் குறிப்பிட்டார். 
 தொடர்ந்து பெடிய அவர், "தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்து தொடர்பான கேள்விக்கு.... "திமுக தற்போது ஆட்சியில் உள்ளது. அதிமுகவும் ஆட்சியில் இருந்தது  அதிமுக ஊழல் என்றால் மக்கள் செல்வாக்கு எப்படி பெற்று இருக்க முடியும், ஊழலை எதிர்த்து போராடக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக தான், முன்னாள் ஆட்சி என்றால் 2006 கலைஞர் முதலமைச்சராக இருந்த ஆட்சியில் நடந்த ஊழலை வெளியிடுவேன் என  சொல்லி இருப்பார் என்று கூறினார். 

ஊழலை எதிர்த்து பாஜக அண்ணாமலை பாதயாத்திரை செல்வத்த தொடர்பான கேள்விக்கு..  "அவரது கட்சிக்காக அவர் சில முறைகளை பயன்படுத்துகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊழலை ஒழிக்க முயற்சிகளை எடுப்பார்" என பதில் அளித்தார். 

 இதையும் படிக்க;... சீட்டைக் காண்பித்து சீட்டிங் செய்த அண்ணாமலை...!!