பெற்ற தாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டி வழிபடும் மகள்...நெகிழ்ச்சியூட்டும் வினோத நிகழ்வு!!

பெற்ற தாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டி வழிபடும் மகள்...நெகிழ்ச்சியூட்டும் வினோத நிகழ்வு!!

கூடுவாஞ்சேரியில் பெண்மணி ஒருவர், பெற்ற தாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி அடுத்த டிபன்ஸ் காலனி நான்காவது தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. இவரது தாய் கன்னியம்மாள் மற்றும் தந்தை ஆறுமுகம்.

லட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே தந்தை பிரிந்து சென்றுவிட, தாய் கன்னியம்மான், வீடுகளில், கூலி வேலை செய்து, தனது ஒரே மகள் லட்சுமியை படிக்க வைத்து வளர்த்த ஆளாக்கியுள்ளார்.

லட்சுமி நன்றாக படித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் டைப்பிஸ்டாக பணியாற்றியுள்ளார். தன்னை பாடுபட்டு வளர்த்த தாயை சந்தோஷமாக பார்த்து கொள்வதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை தாயுடனேயே கழித்துள்ளார் லட்சுமி.

ஒரு கட்டத்தில் கன்னியம்மாள் இறந்து போக மனமுடைந்த லட்சுமி, தனது தாயின் நினைவாக கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். தாயாரின் உருவத்தில் சிலை செய்து, சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்துள்ளார் இந்த பாசக்கார மகள். இந்த கோயிலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் வந்து வணங்கிச் செல்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.