பேருந்து வசதி இன்றி தவித்து வந்த கிராமம்: பேருந்து ஏற்பாடு செய்து தந்த எம். எல். ஏ -க்கு மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி.

பேருந்து வசதி இன்றி  தவித்து வந்த கிராமம்:     பேருந்து ஏற்பாடு செய்து தந்த எம். எல். ஏ  -க்கு  மக்கள் நெகிழ்ச்சியுடன்  நன்றி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பல ஆண்டு காலமாக பேருந்து வசதி இல்லாமல் தவித்து வந்த கிராம மக்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த குரும்பூண்டி என்ற கிராமம் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக இருந்து வருகிறது.

இந்த கிராமத்திற்கு பல ஆண்டு காலமாக பேருந்து வசதி இல்லாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் அன்றாடம் தேவைகளுக்கும் ,பள்ளி கல்லூரிகளுக்கும் அருகில் உள்ள கந்தர்வகோட்டைக்கு செல்ல வேண்டும் என்றால் நடைபயணமாகவும் இருசக்கர வாகனத்திலும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கிராமத்திற்கு கந்தர்வகோட்டையில் இருந்து பேருந்து இயக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக பல அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை சந்தித்து கிராம மக்கள் குரும்பூண்டி கிராமத்திற்கு கந்தர்வகோட்டையிலிருந்து பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இதனை அடுத்து எம்எல்ஏ சின்னத்துரை கந்தர்வகோட்டையில் இருந்து செங்கிப்பட்டி செல்லக்கூடிய ஜி5 அரசு நகரப் பேருந்தை தினசரி காலை மாலை என இரு வேலைகளிலும் குரும்பூண்டி கிராமத்திற்கு செல்ல நடவடிக்கை எடுத்து இன்று குரும்பூண்டி கிராமத்தில் அந்த பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து கிராம மக்களுடன் அந்த பேருந்தில் பயணித்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ சின்னத்துரைக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    |  "மதுவிலக்கு ; பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா ?" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி.