10 கால்நடைகள், 3 மனிதர்களை கொன்ற புலி... மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி...

நீலகிரி மாவட்டம் தேவர் சோலை மற்றும் தேவன் எஸ்டேட் பகுதிகளில் மனிதர்களையும் , கால்நடைகளையும் வேட்டையாடி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

10 கால்நடைகள், 3 மனிதர்களை கொன்ற புலி... மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்திற்குள் உலா வரும் புலி, மனிதர்களையும் மாடுகளையும் தாக்கி கொன்றுள்ளது. தேவன் எஸ்டேட் பகுதியில் பதுங்கி உள்ள புலியின் நடமாட்டத்தை நேரில் பார்த்ததாக மக்கள் கூறியதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

10 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும் மரங்களின் மீது பரண்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள 15 பேர் கொண்ட குழு, பிரத்யேக உடை அணிந்து, வனப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகிறது.  

புலியை பிடிக்கும் வரை இரவு நேரங்களில் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.