முல்லைப்பெரியாறு அணையில் வல்லுநர் குழுவினர் ஆய்வு...!

முல்லைப்பெரியாறு அணையில் வல்லுநர் குழுவினர் இரண்டாம் நாளாக இன்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, 2 ஆயிரத்து 230 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 புள்ளி 40 அடியாக உள்ளது. சுமார் 105 கன அடிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.  

இதையும் படிக்க : காலாண்டு வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டம்...!

இந்நிலையில், பேபி அணை, சுரங்கப்பகுதி, 13 மதகுகள் மற்றும் நீர் கசிவு பகுதிகளில் வல்லுநர்கள் குழுவினர் இன்று இரண்டாம் நாளாக ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அணையில் பொருத்தப்பட்டுள்ள மழை அளவு கருவி, திசைகாட்டும் கருவி, நில அதிர்வு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இன்றைய ஆய்வுக்கு பிறகு மத்திய தலைமை கண்காணிப்பு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என வல்லுநர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.