6 பேரின் விடுதலையில் தமிழக அரசு தேவைப்பட்டால்...சட்டத்துறை அமைச்சர் பேச்சு!

6 பேரின் விடுதலையில் தமிழக அரசு தேவைப்பட்டால்...சட்டத்துறை அமைச்சர் பேச்சு!

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பில், திமுக மற்றும் தமிழக அரசு சார்பாக சிறப்பான மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

ஆளுநரிடம் விளக்கம் அளிக்கப்படும்:

சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டத்துறையில் புதிய  பட்டதாரிகளுக்கான தன்னார்வ பயிற்சி திட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் குறித்து விவாதிக்க ஆளுநரிடம் நேரம் கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஆளுநரை சந்திக்கும் போது, இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், உரிய விளக்கங்கள் ஆளுநரிடம் எடுத்துரைக்கப்படும் என்றும்தெரிவித்தார்.

இதையும் படிக்க: மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!

மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: 

தொடர்ந்து பேசிய அவர், 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அவர், திமுக மற்றும் தமிழக அரசு சார்பாக சிறப்பான மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என விளக்கம் அளித்தார். 

தேவைப்பட்டால் வாதங்களை முன் வைக்கும்:

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிக்கு, தமிழக அரசு உரிய சட்ட பாதுகாப்பை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என்றும், 6 பேரின் விடுதலையில் மத்திய அரசின் மறுசீராய்வின் போது, தேவைப்பட்டால் தமிழக அரசு வாதங்களை முன் வைக்கும் என்றும் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.