மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!

பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்:
சென்னை ராணிமேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர், பெண்கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரிக் கல்லூரி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். ராணி மேரிக் கல்லூரியை இடிக்க அப்போதைய அதிமுக அரசு முனைந்ததாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதை எதிர்த்து மாணவிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். பெண் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகவும், பேருந்து கட்டண சலுகை, பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
உறுதியளித்த ஸ்டாலின்:
தொடர்ந்து பேசிய அவர், மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையின் படி, ராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது உறுதியளித்தார்.
அறிவுறுத்தல்களை மீறி விதவிதமாக முடி வைத்திருந்த மாணவர்களுக்கு சொந்த செலவில் ஆசிரியர் சிகை அலங்காரம் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் கையில் மோதிரம், அணிந்து வரக்கூடாது எனவும் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனையும் மீறி புள்ளிங் கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த மாணவர்களுக்கு சொந்த செலவில் சிகை அலங்காரம் செய்திருக்கிறார் அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் அருணன். மேலும் முழுக்கால் சட்டையை முக்கால் கால் அளவிற்கு விதவிதமாக பள்ளிக்கு அணிந்து வந்த ஒன்பதாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் 50 பேருக்கு டெய்லரை பள்ளிக்கு வரச் சொல்லி ஒரே மாதிரியான சீருடையையும் தைத்து தந்திருக்கிறார் ஆசிரியர் அருணன்.
புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த அனைவருக்கும் போலீஸ் கட்டிங் செய்த ஆசிரியரின் இந்த காட்சிகள் இணையதளத்திலும் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிக்க: நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் .... அமைச்சர் செந்தில் பாலாஜி!!
மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், மின் கம்பிகள் அறுந்து விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எதிர்காலத்தில் திட்டம் உள்ளதா என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதாவது மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை தெரிவித்த மா. சுப்பிரமணியன்!!
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சென்னை கலாஷேத்ராவின் ருக்மணி கல்லூரியில் 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரசின் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், விசிகவின் எஸ்எஸ் பாலாஜி ஆகியோர் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் இச்சம்பவம் தொடர்பாக 210 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், இதுவரை காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
இதையும் படிக்க : புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு...தங்கம் தென்னரசுவின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை!
மேலும் விவகாரம் குறித்த தகவல் கிடைத்தவுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும், தற்போது மாணவிகள் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் குழு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும்ம், குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் தொடங்கி வைத்து பேசினார். ஆலோசனைக் கூட்டம் முடிவு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருவதால், நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மத்துவமனைகளிலும், 100 சதவீதம் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவித்தார்.
மேலும் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு இல்லை என்று கூறிய அவர், நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் அதற்காகவே இந்த முன்னேற்பாடு எனவும் கூறினார்.
இதையும் படிக்க: எடப்பாடி பழனிச்சாமி கையில் இனி அதிமுக…! பெரும் பங்கு வகிக்கும் மூன்று மாஜிக்கள்..!
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தலைமை பொறுப் பிற்கு வரவேண்டும் எனத் தன் முழு ஈடுபாட்டை கொடுத்து தற்போது வெற்றியை ஈட்டி தந்துள்ளனர் மூன்று மாஜிக்கள்.
எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, இரட்டை தலைமைக்கு முடிவு கட்டும் வகையில் முழு பொறுப்பும் எடப்பாடி பழனிசாமி கையில் வந்துள்ளது.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த பிரச்சனைக்கு தற்போது தான் முடிவு கிடைத்திருக்கிறது. ஓ.பன்னிர் செல்வத்தின் புதிய யூகங்களை கையாளுவதற்கு மிகப்பெரிய தூண்களாக அந்த மூன்று மாஜிக்கள் செயல்பட்டுள்ளனர்.
இதில் இவர்களின் செயல்பாடு பெரும் பங்கு வகிக்கும் வகையில், கே. பி.முனுசாமி , சிவி சண்முகம் , எஸ். பி.வேலுமணி அதிமுகவில் நடைபெறும் அனைத்து போராட்டங்களில் பங்கேற்று எடப்பாடிக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
-முருகானந்தம்
இதையும் படிக்க :நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருக்கும் 'மைதான்' படத்தின் டீசர்...!!