பிரஷ்-க்கு பதில் தையல் மிஷினால் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்...!

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பிரஷ்க்கு பதிலாக "தையல் மிஷினால்" அப்துல் கலாம் உருவத்தை வரைந்து பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தல்..!

பிரஷ்-க்கு பதில் தையல் மிஷினால் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்...!

ஓவிய ஆசிரியர் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர், செல்வம். 

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் :

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றியவர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அப்துல் கலாம்  பெரும் தூண்டுகோளாக விளங்கியவர். விஞ்ஞானி முதல் குடியரசுத் தலைவர் வரை நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி இன்றியமையாதது. 1998 ஆம் ஆண்டில் போக்ரான் அணுசக்தி சோதனையில் பங்கு வகித்ததன் மூலம் இந்தியாவின் "ஏவுகணை நாயகன்" என்ற பட்டத்தைப் பெற்றார். கடத்த 2015 ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி உயிரிழந்தார். 

பிரஷ்க்கு பதிலாக தையல் மிஷினால் ஓவியம் : 

இந்நிலையில் நாளை அவரின் நினைவு நாள் என்பதனை முன்னிட்டு பிரஷ்க்கு பதிலாக "தையல் மிஷினால்" நீர் வண்ணத்தில் தையல் மிஷினை தொட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவத்தை 25 நிமிடங்களில் அவர் வரைந்துள்ளார்.

குவிந்து வரும் பாராட்டுக்கள் ; 
 
பிரஷ் பயன்படுத்தாமல், "தையல் மிஷினால்" அப்துல்கலாம் உருவத்தை வரைந்து  கொண்டிருக்கும்போது  பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து  ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.